மாகாண சபையில் உள்ள காணி நிதி அதிகாரங்கள் கொண்டுவலப்பட வேண்டும் - சபா குகதாஸ்

முதலீட்டை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாகாண சபையில் இருக்கின்ற அதிகாரத்தை குறிப்பாக காணி நிதி அதிகாரங்கள் இங்கே கொண்டு வரப்பட வேண்டும். ஆகவே, தமிழ் கட்சிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயராஜ ராஜபக்ஷ அவர்களினால் வெளியிடப்பட்டிருக்கின்ற 22 வது திருத்தச் சட்டம் தொடர்பாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தமிழ் கட்சிகளுக்கு விடுத்திருக்கும் வேண்டுகோளில் தெரிவித்திருப்பதாவது;

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் 22 வது திருத்த சட்டத்தை கொண்டு வர இருப்பதன் காரணமாக அந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறிப்பாக நீதி அமைச்சர் விஜயராஜ ராஜபக்ஷ அவர்களினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

உண்மையில் அந்த விடயங்கள் கடந்த காலங்களில் 17 ஆவது திருத்த சட்டத்தில் கொண்டுவந்த விடயங்கள் மீண்டும் 18 வது சட்டத்தில் நீக்கப்பட்டு மீண்டும் 19இல் கொண்டுவரப்பட்டு மீண்டும் இது நீக்கப்பட்டு மீண்டும் 22 இது கொண்டு வரப்படுகின்றது.

இதில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும், குறிப்பாக அமைச்சரவையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் இந்த வேளையில் இலங்கையில் நடைபெறும் ஊழல் தொடர்பான சட்டரீதியாக இது கொண்டுவரப்பட இருந்தாலும், இது கடந்த காலங்களில் மாறி மாறி வந்த உள்ளடக்கப்பட்ட திருத்தங்களாகத்தான் இருக்கின்றன.

ஆனால் தற்போது ரனில் அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளின் உதவிகள் கிடைப்பது பின்னடைவை சந்தித்து இருப்பது காரணமாக இவ்விடயத்தை இவர்கள் உடனடியாக கொண்டு வர முயற்சிக்கின்றார்கள்.

அந்த வகையில் உடன் வருவதன் காரணம் முற்று முழுதாக இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையரின் முதலீடு வரும் வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கும்.

அந்த வகையில் இந்த முதலீட்டை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாகாண சபையில் இருக்கின்ற அதிகாரத்தை குறிப்பாக காணி நிதி அதிகாரங்கள் இங்கே கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த 22 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுகின்றபொழுதே அந்த காணி நிதி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்படுகின்ற பொழுது, பெரும்பாலும் அந்தந்த மாகாணங்களில் இருந்து வெளிநாட்டுக்கு வெளியேறிய இளைஞர்கள் இந்த நாட்டுக்குள் வந்து போதிய முதலீடு செய்ய இது வாய்ப்பாக இருக்கும்.

ஆகவே, புதிய அரசியலமைப்பு வருவதற்கு நீண்ட காலம் எடுக்கும். கடந்த காலங்களில் புதிய அரசியலமைப்பு வருகின்றபோது ஆட்சிகள் மாறும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றமையால், இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் மிக நிதானமாக சிந்தித்து இவ் விடயத்தை முன்னெடுக்கின்ற போது எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்த நாட்டில் உள்ள ஒன்பது மாகாணங்களுக்கும் முதலீட்டார்கள் தங்கள் முதலீட்டை பெருக்கும்போது பொருளாதாரம் மீள் கட்டி எழுப்பப்படுவதற்கு மாகாணங்களுக்குள்ள அதிகாரங்கள் காலப்போக்கில் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஆகவே, மாகாணங்களுக்குள்ள காணி நிதி அதிகாரங்களை பெற்றுக் கொள்ளும் முகமாக அனைத்து தமிழ் கட்சிகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வினயமாக நான் கேட்டு நிற்கின்றேன்.

மாகாண சபையில் உள்ள காணி நிதி அதிகாரங்கள் கொண்டுவலப்பட வேண்டும் - சபா குகதாஸ்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY