
posted 29th August 2022
கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (28) இரத்த தான முகாம் நடைபெற்றது.
காலமான பிரகாஷின் நண்பர்களின் ஏற்பாட்டில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.
கொடிகாமத்தைச் சேர்ந்த பிரகாஸ் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயால் பாதிக்கப்படதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சவாலுக்கு மத்தியில் ஊடகத் துறையில் தன்னை நிலைநிறுத்திய அவர் பத்திகைகளுக்கும், இணையங்களுக்கும் செய்திகளை வழங்குபவராக, இணைய பதிவேற்றுநராக பணியாற்றினார்.
இந்நிலையில் கடந்த 2021 செப்ரெம்பர் 2ஆம் திகதி கொரோனாத் தொற்றால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY