மன்னால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் மன்னாருக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கவும் - மன்னார் பிரதேச சபை கோரிக்கை

மன்னாரில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் இவ் வேளையில் மன்னாரில் உற்பத்தி செய்யப்படும் ஒரு காற்றாலையின் உற்பத்தியையாவது மன்னார் மாவட்டத்துக்கு நிரந்தரமான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் சென்ற உறுப்பினர்கள் மன்னார் மாவட்ட மின்சார சபை பிரதம பொறியியலாரை சந்தித்து வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை (01.08.2022) மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தலைமையில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் பேசாலை நடுக்குடா பகுதியில் அமைந்துள்ள காற்றாலை பூங்காவிலுள்ள மின்சார தலைமை காரியாலயம் சென்று பிரதம பொறியியலாளரை சந்தித்தனர்.

இச் சந்திப்பின்போது மன்னார் பிரதேச சபையினர் பிரதம பொறியியலாளரிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு பூராகவும் குறிப்பிடப்பட்ட நேரங்களில் மின் வெட்டுக்கள் இடம்பெற்று வருகின்றது என்பது அறிந்த விடயமாகும்.

இதேவேளையில் மன்னார் தீவு பகுதியில் 32 காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு இவைகள் வெளி மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

மன்னாரில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியில் ஒரு காற்றாலையில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியானது மன்னாருக்கு போதியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுவதால், மன்னாரில் பகல் இரவு என இடம்பெற்று வரும் மின் தடையை நிறுத்தி இக் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தியின் மூலம் நிலையான மின்சாரத்தை மன்னார் மாவட்டத்துக்கு வழங்க வேண்டும் என்று மன்னார் பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் சென்ற பிரதேச சபை உறுப்பினர்கள் இக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தங்களுக்கு எழுத்து மூலம் தரும்படியும் அதைத் தொடர்ந்து தாங்கள் பரீசீலித்து சரியான ஒரு முடிவை பெற்றுத் தருவாதாக பிரதம பொறியியலாளர் தெரிவித்ததாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவித்தார்.

இவர்களின் பேச்சுவார்த்தைக்குப் பின் கடந்த இரு தினங்களும் மன்னாரில் இரவில் நடைபெற்று வந்த மின் வெட்டு இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் மன்னாருக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்கவும் - மன்னார் பிரதேச சபை கோரிக்கை

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY