
posted 5th August 2022
மன்னார் மறைமாவட்டத்தின் வரலாற்றுப் பகழ்மிக்க யாத்திரிகர் ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்ததல வருடாந்த பெருவிழா இனிவரும் காலங்களில் ஆவணி மாதத்தின் முதல் சனி அன்றே கொண்டாடப்படும் என மன்னார் மறைமாவட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
கோடி அற்புதரான புனித அந்தோனியாரின் வரலாற்றுப் புகழ்மிக்க யாத்திரிகர் ஸ்தலங்களில் ஒன்றாக மன்னார் மறைமாவட்டத்தின் விளங்கும் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்ததல வருடாந்த பெருவிழாவானது கடந்த காலங்களில் ஆவணி மாதத்தின் முதல் ஞாயிறு அன்றே கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், இவ் வருடம் (2022) தொடக்கம் இப் பெருவிழாவானது ஆவணி மாதத்தின் முதல் சனி அன்று கொண்டாடுவதற்கான எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இவ்வருட பெரிகட்டு புனித அந்தோனியார் யாத்திரிகர்கள் ஸ்தல பெருவிழாவானது 06.08.2022 அன்று சனிக்கிழமை நடைபெறஉள்ளது.
இத் தினத்தன்று (06.08.2022) காலை 7.30 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இத் திருவிழாவை முன்னிட்டு மன்னார் நகரிலிருந்து காலை 5.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணி வரை போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புகையிரதம் மூலம் வரும் யாத்திரிகர்களுக்கும் மடு வீதி புகையிரத நிலையத்திலிருந்து பெரியகட்டு திருதலத்துக்கு வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் ஆயரின் முயற்சியினால் இத்தாலி நாட்டின் புதுமை நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட தூய அந்தோனியாரின் புனித பண்டம் (எலும்பு) கடந்த 28.07.2022 அன்று மன்னாரிலிருந்து பவனியாக எடுத்துவரப்பட்டு இப் பெரியகட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY