மன்னாரில் பரவலாகப் பரவும் கொரோனா. பூஸ்டர் தடுப்பூசியைப் போடுங்கள் - வைத்திய கலாநிதி க. சுதாகர்

நாட்டில் தற்பொழுது மீண்டும் தோன்றியுள்ள கொரோனா தொற்று நோயானது மன்னாரிலும் இந் நோயாளால் பீடிக்கப்படுவோர் நாளாந்தம் இனம் காணப்பட்டு வருவதால், இதுவரைக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் இத் தடுப்பூசியை போடுவதன் மூலம் இந் நோயால் ஏற்படும் அனர்த்தங்கலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என மன்னார் மாவட்ட தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்தார்.

வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் அவர்களை மன்னார் மாவட்டத்தின் கொரோனா தொற்று நோய் தொடர்பாக வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது இம் மாதத் தொடக்கத்திலிருந்து நாளாந்தம் சுமார் பத்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இத் தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் ஒரு இடம் என்று அல்லாது பரவலாகவே இனம் காணப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இக்கொரொனாத் தொற்றாளர்கள் மன்னாரில் நானாட்டான், முசலி பிரதேச பிரிவுகளில் அதிகமாக அடையாளம் காணப்பட்டு வந்தனர். ஆனால், தற்பொழுது இத் தொற்றாளர்கள் மன்னாரில் பரவலாக அனைத்து பிரதேச செயலக பிரிவுகளிலும் காணப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆகவே, ஏற்கனவே இத் தொற்று நோயிலிருந்து விடுபடும் நோக்குடன் பூஸ்டர் மருந்து ஏற்றாதவர்கள் தற்பொழுது பூஸ்டர் ஊசியை போட்டுக் கொள்ளும்படி யாவருக்கும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது எனவும், எனினும், தற்பொழுது பரவும் இத்தொற்றினால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் பெரும்பாலும் குறைவாக காணப்படுகின்றபோதும், இந் நோய் பரவலின் வேகத்தை குறைப்பதற்காகவே பூஸ்டர் தடுப்பூசியை ஏற்றும்படியாக அறிவுறுத்தப்படுகின்றனர்.

எனவே, மன்னார் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசியானது சகல சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் வழங்கப்படுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக அந்தந்த பகுதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கேட்டு அறிந்து கொள்ளும்படியும் பொது மக்கள் வேண்டப்பட்டுள்ளனர்.

அத்துடன் பொது இடங்களில் ஒன்று கூடும்போதும், பிரயாணங்கள் செய்யும்போதும் கட்டாயம் ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி கதிர்காமநாதன் சுதாகர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் பரவலாகப் பரவும் கொரோனா. பூஸ்டர் தடுப்பூசியைப் போடுங்கள் - வைத்திய கலாநிதி க. சுதாகர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY