
posted 2nd August 2022
கடந்த நான்கு மாதங்களாக மீனவ சமூகம் எரிபொருள் இன்மையால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவ்வேளையில் மண்ணெணெய் விநியோகத்தை பூரணமாக தடைசெய்திருப்பது மீனவ சமூகம் கொதித்தெழும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சனாதிபதிக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ள மடலில் தெரிவித்திருப்பதாவது;
எரிபொருளான மண்ணெண்ணெய் விநியோகத்தை பூரணமாக தடைசெய்யும் நடவடிக்கையானது வடக்கு கிழக்கில் வாழும் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் மட்டத்தில் பாரிய போராட்டங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கடந்த நான்கு மாதங்களாக எரிபொருளான மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
ஆனால் இந்த மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது இந்த மக்களின் அனைத்து நிலைகளையும் பாதித்திருக்கிறது.
எனவே இம்மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொளவது என்னவென்றால் இம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்த வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சனாதிபதிக்கு அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY