மடு மாதாவின் பெருவி்ழாவிற்கு விஷேட ரயில் சேவை - அரசாங்க அதிபர்

மன்னார் மறைமாவட்டத்தின் மடு பெருவிழாவை முன்னிட்டு கொழும்பு மற்றும் அனுராதபுரத்திலிருந்து விஷேட ரயில் போக்கு சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

எதிர்வரும் மருதமடு அன்னையின் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் திங்கள் கிழமை (01.08.2022) நடைபெற்ற முன்னேற்பாடு கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்:

இக் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர், மடு திருத்தலத்தின் பரிபாலகர், ஏனைய திணைக்கள தலைவர்கள் மற்றும் துறைசார்ந்த ஏனை உத்தியோகத்தர்களோடு இது தொடர்பாக கலந்துரையாடினோம்.

அதன் அடிப்படையில் தற்பொழுது உள்ள சூழ்நிலையில் எரிபொருள் நெருக்கடி காணப்பட்டபோதும் மடு ஆலய பெருவிழாவுக்கு நான்கு இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்படுகின்றது.

ஆகவே இதற்கிணங்க பக்தர்களின் நலன் நோக்கி நாங்கள் திணைக்களங்களின் சேவைகள் தொடர்பாக ஒழுங்குபடுத்தியுள்ளோம்.

அதேவேளையில் விஷேட ரயில் சேவை கொழும்பிலிருந்து மடு புகையிரத நிலையத்துக்கும், அத்துடன் அனுராதபுரத்திலிருந்து மடு புகையிரத நிலையத்துக்கும், எதிர்வரும் 13 . 14 , 15ஆம் திகதிகளில் சேவைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு பேரூந்து போக்குவரத்து இணைப்பு சேவைகளும் மடு புகையிரத நிலையத்திலிருந்து மடு ஆலயத்தக்கும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நோய் மீளவும் ஆரம்பித்துள்ளதனால் இவ் விழாவுக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மடு மாதாவின் பெருவி்ழாவிற்கு விஷேட ரயில் சேவை - அரசாங்க அதிபர்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY