போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் விடுபடுவார்கள்  - மௌலவி  அசீம்

புதுக்குடியிருப்பு கிராமத்தின் மாணவர்களின் நலன் கருதியும், இவ்வூர் சமூகத்தினதும் நலன் கருதியும் இந்த கிராமதில் போதை பொருட்களுக்கு அடிமைகளாக இருப்போர் இனியாவது தங்கள் நடவடிக்கையிலிருந்து விலகிச் செல்வீர்கள் என எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றோம் என மன்னார் மூர் விதி பெரிய பள்ளிவாசல் மௌலவியும், பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.ஏ. அசீம் அவர்கள் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (19.08.2022) மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் அப்பகுதி சமூகத்தினால் போதை பொருட்களுக்கு எதிரான விழப்புணர்வு கவனயீர்ப்பு போராட்டத்தின் போது மன்னார் மூர் விதி பெரிய பள்ளிவாசல் மௌலவியும் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பினருமான மௌலவி எஸ்.ஏ. அசீம் தெரிவிக்கையில்;

நாட்டினதும், இந்த கிராமத்தினதும் விஷேடமாக உங்களினதும், உங்கள் குடும்பத்தினதும் நலன் கருதி போதை வஸ்துப் பாவனையிலுள்ளவர்கள் உடன் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் மிகவும் பணிவாக இதன் பாவனையாளர்களிடம் வேண்டி நிற்கின்றோம்.

இந்த தேச விரோதச் செயல் சமூக விரோதச் செயல் மாணவர்களின் கல்வியை அழிக்கின்ற இந்த செயலை கைவிடும்படி நாம் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

இந்த போதை வஸ்து பாவனையிலிருந்து விடுபடாவிடில் எங்கள் நடவடிக்கைகள் தொடர்ந்து கிராம அபிவிருத்தி சங்கங்கள் மாவணவர்கள் சமூக நலன் விரும்பிகள் இவ் ஊர் மக்கள் யாவரும் ஒன்றினைந்து இவற்றை தடை செய்வதற்கான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இந்த போதை வஸ்துகளுக்கு அடிமைகளாக இருக்கும் நீங்கள் இக் கிராமத்தில் மோசமான செயல்பாட்டிலிருந்து இனியாவது தவிர்த்து வாழ்வீர்கள் என நாங்கள் நம்பி இருக்கின்றோம்.

போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் விடுபடுவார்கள்  - மௌலவி  அசீம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY