நெற்செய்கைக்கு எரிபொருளைத் தந்துதவும்

யாழ் மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையை சிறந்த முறையில் மேற்கொள்ள தேவையான எரிபொருளினை இரு வார காலத்திற்குள் தந்துதவுமாறு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் 02/08 செவ்வாய்க்கிழமை அனுப்பிய தனது கோரிக்கைக் கடிதத்தில்;

யாழ் மாவட்ட கமக்கார அமைப்புகள் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திடம் பெரும்போக நெற்செய்கைக்கான எரிபொருளை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் இவ் விடயத்தினை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரான எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

யாழ் மாவட்ட விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையை மழை நீரை மாத்திரம் பயன்படுத்தியே மேற்கொண்டு வருகின்றனர்.

பெரும்போக நெற் செய்கைக்கான ஆரம்ப நடவடிக்கையாக விவசாயிகள் தமது விளை நிலங்களை ஆடி மாதத்தில் உழுது பண்படுத்துவது வழமை. ஆனால் இம்முறை (2022/2023) காலபோக நெற்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

டீசலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விளை நிலங்களை உழவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் இம்முறை காலபோகத்தில் 32,720 ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஏக்கர் நிலத்தினை உழவியந்திரம் மூலம் பண்படுத்த 8லீட்டர் டீசல் தேவை என்ற அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கு இம்முறை 261,760 லீட்டர் டீசல் தேவைப்படுகிறது.

யாழ் மாவட்டத்தில் தற்போது உழவு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. எனவே இரு வார காலத்திற்குள் டீசல் கிடைக்கப்பெறும் பட்சத்தில் சிறந்த முறையில் நெற்பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியும்.

எனவே விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து விவசாயிகள் திருப்தி அடையும் வகையில் இப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நெற்செய்கைக்கு எரிபொருளைத் தந்துதவும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY