நிந்தவூர் பிரதேச சபை முன்மாதிரி

பொது மக்களின் நலன் கருதி நிந்தவூர் பிரதேச சபை அறிமுகப்படுத்தியுள்ள அழைப்பு மையம் (call center) எனும் நடைமுறைத்திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரதேச சபையினால் தீர்வு காணப்பட வேண்டிய மக்களின் தேவைகள், பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை உடன் காண்பதற்கு இத் திட்டம் வழிவகுத்துள்ளது.

இதன்படி பிரதேச பொதுமக்கள் நேரடியாகப் பிரதேச சபைக்கு வருகை தந்து தமது தேவைகள், பிரச்சினைகளையிட்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்வதிலுள்ள அசௌகரியங்களைகக் குறைக்கும் நோக்குடன் அழைப்பு மையத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது மக்கள் தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கு அழைப்பு மையம் மூலம் ஆவன செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் மக்கள் தேவைகள், பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தாமதமின்றி வழங்கவும் ஆவன செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் எம். அஷ்ரப் தாஹிர், மக்கள் நலன் கருதி முன்னெடுத்து வரும் பல்வேறு முன்மாதிரி செயற்திட்டங்களுள் ஒன்றான மேற்படி அழைப்பு மையத்திட்டம் குறித்து பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர் பிரதேச சபை முன்மாதிரி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY