திருக்கேதீஸவர புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த மன்றில் விண்ணப்பம்.

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் மனித புதைகுழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களை, பல காலங்களாக அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளது. என்ன பரிசோதனை மேற்கொள்ளப் போகின்றீர்கள்? என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் என்று இதன் வழக்கின்போது பாதிக்கப்பட்ட உறவுகளின் சார்பில் வழக்கில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரனிகளால் முன்வைக்கப்பட்டதுக்கு அமைவாக தெரிந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்த நீதிமன்றில் விண்ணப்பம் மன்றில் வைக்கப்பட்டது.

மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் 2013 ஆம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (05.08.2022) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் சமட் கிப்துல்லா முன்னையில் விசாரனைக்கு எடுக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கைத் தொடர்ந்து இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஐராகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

2013 ஆம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு வெள்ளிக்கிழமை (05.08.2022) மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அரச சட்டத்தரணியுடன் இப் புதைகுழியில் அகழ்வு பணிக்கு தலைமை தாங்கியிருந்த சட்டவைத்திய நிபுணர் டீ.எல். வைத்தியரத்தின மற்றும் ஹேவனகே ஆகியோருடன் குற்றப்புலணாய் அதிகாரிகளும் இவ் வழக்கின்போது மன்றில் ஆஐராகி இருந்தனர்.

இவர்கள் மன்றில் தங்கள் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டபோது ஏலவே மன்னார் திருக்கேதீஸ்வர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் தற்பொழுது அனுராதபுரத்தில் வைத்தியசாலையில் பாதுகாத்து வைத்துள்ளதாகவும், இந்த மனித எச்சங்களிலிருந்து சீ14 காபன் பரிசோதனைக்கு அமெரிக்காவிலுள்ள வ்லோரடா மானிலத்திலுள்ள 'பீற்றஅர்ரிடிக்' என்ற நிறுவனத்துக்கு அனுப்புவதற்கான மாதிரிகளை தெரிவு செய்வதற்காக இம் மாதம் (ஆவணி) 24 , 25 , மற்றும் 30 ந் திகதிகளில் தங்களுக்கு ஏற்ற திகதிகளாக இருப்பதால் இத் தினங்களில் மன்னார் அல்லது அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்னிலையில் அகழ்வு செய்யப்பட்ட மாதிரிகளை பிரித்தெடுப்பதற்கு தங்களுக்கு அனுமதி வழங்கும்படியும், பரிசோதனைகளுக்காக எச்சங்கள் எடுக்கப்பட்ட பின் ஏனைய மனித எச்சங்களை கொழும்பு வைத்தியரத்தினாவின் ரேடியோ காபன் சோதனை செய்யும் நிறுவனமாகிய கொழும்பு 10திலுள்ள நிறுவனத்துக்கு அதனை பாரப்படுத்துவதற்கு ஐ.சீ.ஆர்.சீ. யின் துணையுடன் இவ் எச்சங்களை கொள்கலன்களில் பொதியிடப்பட்டு அங்கு அனுப்பி வைப்பதற்கும் தாங்கள் தீர்மானித்திருப்பதாகவும், இந்த குறித்த தினங்களில் இவ்வாறான பிரித்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட நீதிமன்றம் அனுமதிக்குமாறு இவர்களால் இக் கோரிக்கை மன்றில் முன்வைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சார்பாக மாந்தை, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கில் முன்னிலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வீ.எஸ். நிரஞ்சன் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக தனது கோரிக்கைகளை தான் முன்வைக்கையில் இவ்வாறான நடவடிக்கை முறை எவ்வாறு வழக்கு தொடர்களினால் நடத்தப்பட போகின்றது என்ற விளக்கம் நீதிமன்றில் கோப்பிலிடப்பட வேண்டும் என்றும், இந்த பிரித்தெடுக்கும் நடவடிக்கைளின்போது மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் நேரடி கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்றும் அத்துடன் பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஐராகி வரும் சட்டத்தரணிகளும் இதில் பங்குபற்றி கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் இதனுடன் கலந்து கொள்ளும் அனைத்து தரப்பினருடனும் மேற்கொள்ளப்படும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், இது சர்வதேச நியமனங்களுக்கு அமைவாகவும், வெளிப்படுத்தல் தன்மையாகவும், ஊடகங்களின் பங்குபற்றுதலுடன் இவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணியால் இக் கோரிக்கைகள் மன்றில் முன்வைக்கப்பட்டன.

இந்தவேளையில் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தாங்கள் பகுப்பாய்வுக்காக மாதிரிகளை தெரிவு செய்ய இருக்கும் குறிப்பிட்ட திகதிகள் அன்றைய தினம் இம் மன்றில் பல வழக்குகள் விசாரணைகளுக்கு இருப்பதனால், இத் தினங்களில் இந்நாட்களை ஒதுக்குவதில் சிரமம் இருப்பதானால் இது குறித்து கட்டளை ஒன்று ஆக்குவதற்கு 24.08.2022 அன்று இவ் வழக்கைத் தவணையிட்டுள்ளார்.

இம் மனித குழியானது 2013 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் ஆலய பகுதியிலிருந்து மாந்தை நோக்கி திருக்கேதீஸ்வர ஆலய வீதியோரமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் குழாய் நிலத்தில் பதித்துச் சென்றவேளையிலேயே இம் மனித புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டு பல மனித எச்சங்கள் அகழ்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருக்கேதீஸவர புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த மன்றில் விண்ணப்பம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY