தியாகிகள் நினைவு கூரலும் கௌரவிப்பும்

ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் உயிர் நீத்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகளை நினைவுகூரும் வைபவமும் அதனுடன் இணைந்ததாக தியாகிகளின் உறவுகளைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றும் கல்முனை மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு – அம்பாறை பிராந்திய ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்பாட்டுக் குழுவினால், கல்முனை வலய ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பெருமளவிலான தியாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், பிரதேச முக்கியஸ்த்தர்கள் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் முக்கியஸ்த்தர்கள், ஏனைய கட்சி முக்கியஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.

கட்சி மத்திய குழு உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான சிவசுந்தரம் புண்ணியநாதன் தலைமையில் கல்முனை, கிறிஸ்த இல்லவரவேற்பு மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீட உறுப்பினர் சின்னையா (சர்மா தோழர்) வின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற நிகழ்வில், மறைந்த கட்சியின் செயலாளர் தியாகி தோழர் க. பத்மநாபாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மறைந்த தியாகிகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும், தியாகிகளை நினைவு கூருமுகமாக உருவப்படங்கள் வைக்கப்பட்டு உறவுகளால் விளக்கேற்றியும், வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் தியாகிகளின் உறவுகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தியாகிகளை நினைவு கூர்ந்தும், ஈழ விடுதலைக்காக அவர்கள் செய்த தியாகங்கள் குறித்தும் நிகழ்வில் பலரும் உரையாற்றினார்.

தியாகிகள் நினைவு கூரலும் கௌரவிப்பும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY