தலைமன்னார் புனித றோன்சியார் ஆலய பெருவிழா

மன்னார் மறைமாவட்டத்தில் பழமைவாய்ந்த தலைமன்னார் பங்கின் பாதுகாவலராம் புனித லோறன்சியாரின் ஆலய வருடாந்த விழா தலைமன்னார் பங்கு தந்தை அருட்பணி மாக்கஸ் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற ஒன்பது தினங்கள் நவநாட்களைத் தொடர்ந்து, புதன்கிழமை (10.08.2022) இவ் ஆலய பெருவிழா இடம்பெற்றபோது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுப்பட்டது.

மன்னார் ஆயர் தனது மறையுரையில் தெரிவித்ததாவது;

மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில்கள் மிகவும் பாதிப்பு நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. அரசியல் பொருளியலில் பாதிப்பகளுக்கு உள்ளாகியுள்ள நாம் இறைவனை மறந்து வாழ்கின்றோம். களவு கொள்ளை அதிகரிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்பட்டு வருகின்றது. விலைவாசி அதிகரிப்பானது மக்களுக்கு ஒரு சவாலாக மாறி வருகின்றது. யாவரும் நற்செயல் புரிபவராகவும், உதவி செய்யும் மனப்பாங்குடனும் வாழ நாம் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என மன்னார் ஆயர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் ஆயர் தனது மறை உரையில், திருச்சபையின் சொத்துக்களை ஒப்படை என அரசன் கட்டளையிட்டபோது மூன்று தினங்களுக்குப் பின் புனித லோறன்சியார் ஏழை எளியவர்களை காண்பித்து இதுவே திருச்சபையின் சொத்து என காட்டியமையால் புனித லோறன்சியார் இரும்பு கட்டிலில் படுக்க வைத்து அவரை நெருப்பினால் சுட்டுக் கொன்றான் அந்த அரசன். அக்கொடுமையான மரணத்தை புனிதர் உரோமை நகர் மக்கள் மனம் திரும்பவும் கிறிஸ்துவ விசுவாசம் உலகெங்கும் பரவவும் இறைவனுக்காக ஏற்றுக்கொண்டார்

வேதாகமத்தின்படி 'சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாக இருந்தால் பெரியவற்றுக்கு உன்னை அதிகாரியாக்குவேன்' என இயேசு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புனித லோறன்சியாரின் மரணத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும் துன்ப நிலத்திலிருந்தே அறுவடை செய்யப்படுகின்றது. ஒரு கோதுமை மணி மண்ணலில் விழுந்து மடிந்தால்தான் அது மரமாக முடியும்.

இவ்வாறான நிலையிலே திருச்சபை வளர்கின்றது. ஆகவே நாம் அன்பிய வாழ்வில் ஒன்றிணைந்து திரு அவையாக வளர்வோம்.

அன்பியங்கள் எமது ஆசிய நாடுகளில் அதிகமாக இருந்து வருகின்றன. இந்த அன்பியங்கள் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த அன்பிய வாழ்வாலே ஆசிய நாடுகள் வளர்ந்து வருகின்றது. வாரத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் திருப்பலிக்கு சென்று வந்தால் சரி என்று இருக்காது வாரம் ஒருமுறையாவது எமது வட்டாரங்களில் ஒன்றுகூடி இறை வார்ததைகளை பகிர்ந்து நாம் இறை சாட்சிகளாக வாழ வேண்டும்.

இன்று அன்பிய வாழ்வு சிறப்பாக நடக்கின்றது என நாம் கூறமுடியாது. ஒரு மந்தைக்கு ஆயன் எவ்வாறு அவசியமோ அவ்வாறே இறைமகன் எமக்கு ஒரு நல்ல ஆயனாக இருந்து செயல்படுகின்றார். அவரை நாம் பின்பற்ற வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் பல சவால்கள் மத்தியில் வாழ்கின்றோம். இன்று இலங்கை நாடு மிகவும் நெருக்கடி நிறைந்த நாடாக காணப்படுகின்றது.

மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில்கள் மிகவும் பாதிப்பு நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. அரசியல் பொருளியலில் பாதிப்பகளுக்கு உள்ளாகியுள்ள நாம் இறைவனை மறந்து வாழ்கின்றோம்.

களவு கொள்ளை அதிகரிக்க்பட்டு மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்பட்டு வருகின்றது. விலைவாசி அதிகரிப்பானது மக்களுக்கு ஒரு சவாலாக மாறி வருகின்றது.

இந்த துன்பகரமான வாழ்க்கையின்போது நாம் இறைவனின் துணையை தேட வேண்டும்.

துன்பத்தின் மூலம் இறைவன் எம்மை தண்டிக்கின்றார் என நாம் எண்ணக் கூடாது.

நாம் ஒருங்கிணைந்த மக்களாக வாழ வேண்டும். இன்று போதைப் பொருள் குடிவெறி எமது சமூதாயத்தை சீரழிக்கின்றன. இதனால் நாம் ஒருங்கிணைந்த மக்களாக செல்ல முடியாத நிலையாக தோன்றி வருகின்றது.

ஆகவே யாவரும் நற்செயல் புரிபவராகவும் உதவி செய்யும் மனப்பாங்குடனும் வாழ நாம் எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் ஆயர்.

இதைத் தொடர்ந்து திருச்சுரூப பவனி கோலாகலமாக இடம்பெற்றது.

இறுதியில் ஆயரால் புனிதரின் திருச்சுரூப ஆசீரும் அனைவருக்கும் வழங்கப்பட்டு புனிதரின் திருவிழா நிறைவு செய்யப்பட்டது.

தலைமன்னார் புனித றோன்சியார் ஆலய பெருவிழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)