தனிநாயகம் அடிகளாரின் 42ஆவது வருட நினைவு தினம்

தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாருடைய 42ஆவது வருட நினைவு தினம் வவுனியாவில் நகர மத்தியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்றுக் (01.09.2022) காலை 08.30 மணிக்கு நகரசபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், தமிழ் அருவி சிவகுமாரனால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.

நகரசபை உபதலைவர் ஆ. குமாரசாமி, நகரசபை உறுப்பினர்களான சந்திரகுலசிங்கம், சுமந்திரன், மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் கென்னடி, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தனிநாயகம் அடிகளாரின் 42ஆவது வருட நினைவு தினம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)