
posted 25th August 2022
நிந்தவூர் இம்றான் விளையாட்டுக் கழகம் நடாத்திய "இம்றான் ப்ரீமியர் லீக்கின்" இறுதி போட்டியில் சம்மாந்துரை விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது
நிந்தவூரில் முன்னனி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான இம்றான் விளையாட்டுக் கழகம் ஐந்தாவது முறையாக நடாத்திய IPL - Imran Premier League தொடரின் இறுதிப் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இறுதிப் போட்டியில் சம்மாந்துரை விளையாட்டுக் கழகமும் சாய்ந்தமருது ப்ளாஸ்டர் விளையாட்டுக் கழகமும் போட்டியிட்டு சம்மாந்துரை விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் சாய்ந்தமருது ப்ளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ரன்னர் அப்பாக தெரிவாகி சுற்றுத் தொடர் முடிக்கு கொண்டுவரப்பட்டது.
இம்றான் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சட்டத்தரனி ஏ.எல். றியாஸ் ஆதம் தலைமையில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய அணிகளுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)