
posted 18th August 2022
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 5, 40, 430 பெறுமதியான மருத்துப் பொருள்கள் நேற்று முன்தினம் (16) வழங்கி வைக்கப்பட்டன .
தற்போது நாட்டில் ஏற்பட்ட மருந்துப் பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குறித்த மருத்துவமனை அத்தியட்சகரான மருத்துவர் க. செல்வநாதனிடம் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாகச் சென்று வழங்கி வைத்ததுடன், சந்நிதியான் ஆச்சிரம் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)