
posted 8th August 2022
மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மண்ணெணெய் வராத காரணத்தினால் மீணவ மற்றும் உப உணவு உற்பத்தியில் ஈடுபடும் குடும்பங்கள் பாரிய பொருளாதார சிக்கலில் தவித்து வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளையில் மீனவர்களுக்காக கொழும்பிலிருந்து கூடிய விலை கொடுத்து மண்ணெணெய் பெறுவதற்கான ஆலோசனையும் இடம்பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்துக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்துக்கு மண்ணெணெய் வராத காரணத்தினால் அதிகமான மீனவ குடும்பங்கள் வாழும் மன்னார் மாவட்டத்தில் தங்கள் மீனவ தொழிலை இழந்த நிலையில் மிகவும் வறுமை கோட்டின் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக பொருளாதார கஷ்ட நிலைக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதேவேளையில் உப உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் இதே நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் ஏற்னவே இவர்களால் மேற்கொள்ளப்பட்ட உப உணவு உற்பத்தி பயிர் செய்கையும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் சிறு விவசாயிகள் வேதனையுற்று இருக்கின்றனர்.
இந்த நிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பு மன்னார் மாந்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு 6500 லீற்றர் மண்ணெணெய் வந்ததாகவும் மன்னார் மாவட்டத்தில் 20 க்கு மேற்பட்ட மீனவ சங்கங்கள் இருக்கின்றபோதும் ஏற்கனவே குறிப்பிடப்பட்ட நான்கு மீனவ சங்கங்களுக்கு மட்டுமே பிரித்துக் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க கொழும்பு கொலனாவில் லீற்றர் 464 ரூபாவுக்கு வியாபார நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் எண்ணெய் இருப்பதாகவும் தேவையென்றால் அவற்றை மீனவர்களுக்கு பெற்றுத்தரக் கூடிய வாய்ப்பு இருப்தாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் மன்னார் மீனவ கூட்டுறவு சமாஜம் கிராமிய மீனவ அமைப்புக்களின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதைத் தொடர்ந்து இது தொடர்பாக மீனவ கூட்டுறவு சமாஜ மற்றும் கிராமிய மீனவ தலைவர்கள் மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகங்களை அழைத்து இவர்களின் அபிப்பிராயங்களை கேட்டுள்ளனர்
ஆனால் 87 ரூபாவுக்கு பெறவேண்டிய மண்ணெணெயை கூடிய விலை கொடுத்து தொழிலுக்கு செல்வது மிகவும் கடினமானதாக இருக்கின்றபோதும் தொழிலின்றி கையேந்தும் நிலைக்கு வந்து கொண்டிருப்தால் ஒரு சில சங்கங்கள் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் இன்னும் ஒருசில சங்கங்கங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மன்னாருக்கு இவ் விலைக்கான மண்ணெணெய் கொண்டு வந்தால் ஒயில் கலந்து லீற்றர் 600 ரூபாவுக்கு மீனவர்களுக்கு வழங்க நேரிடும் எனவும்
இந்த நடவடிக்கை மண்ணெணெய் இன்மையால் தவிக்கும் மீனவர்களுக்கான ஒரு தற்கால நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் மீனவ கூட்டுறவு சமாஜமும் மீனவ கிராமிய அமைப்புக்களின் தலைவர்கள் ஆலம் மற்றும் யஸ்ரின் சோசை இவ்வாறு தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY