
posted 18th August 2022
இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்திய மரணங்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் அடங்குவர்.
அவர்களில் ஆண் ஒருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராவார். மற்றைய ஆணும் மூன்று பெண்களும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 இறப்புகளுடன், இலங்கையில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 16,335 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரை 668,336 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதாகவும் அவர்களில் 1534 பேர் வைத்தியசாலையிலோ அல்லது வீட்டிலோ மருத்துவ கண்காணிப்பின் கீழ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 650, 172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிக்கிறது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)