
posted 19th August 2022
கிளிநொச்சி - அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம் புதன்காலை 10 மணியளவில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 525 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்தக் கட்டடத் தொகுதியைக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா ஆகியோர் இணைந்து நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.
யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிறேமகுமார, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கணக்காளர் ஆர். ஏ. யூ. ரணவீர, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், பேரவை உறுப்பினர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY