
posted 8th August 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசை முற்று பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான எரிபொருள் விநியோகம் காரணமாக நேற்று (06) மற்றும் இன்றைய (07) தினம் பெற்றோல் வரிசை முற்றாக குறைவடைந்துள்ளது.
சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதுடன், வரிசை இன்றி பெற்றோல் பெற்று வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.
ஆயினும் நாளைய தினம் நீண்ட வரிசை காணப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் அடுத்த வாரமும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது,
அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை (08), காலை 8 மணிமுதல் 11 மணிவரை மருத்துவர்களும், 11 மணிமுதல் 3 மணிவரை சுகாதார துறையினரும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று செவ்வாய்க்கிழமை (09), காலை 8 மணிமுதல் 11 மணிவரை கல்வி திணைக்கள உத்தியோகத்தர்களு்ம, 11 மணிமுதல் 3 மணிவரை ஆசிரியர்களும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
புதன்கிழமை (10), காலை 8 மணிமுதல் 11 மணிவரை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், 11 மணிமுதல் 3 மணிவரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்.
வியாழக்கிழமை (11), காலை 8 மணிமுதல் 11 மணிவரை போக்குவரத்து சபையினரும் மற்றும் வங்கி ஊழியர்களும், 11 மணிமுதல் 3 மணிவரை வனவள திணைக்களம்,வனஜீவராசிகள் திணைக்களம், புகையிரத திணைக்களம் மற்றும் மின்சார சபை ஊழியர்களும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்
வெள்ளிக்கிழமை (12), காலை 8 மணிமுதல் 11 மணிவரை விவசாயம் மற்றும் நீர்ப்பானச திணைக்கள உத்தியோகத்தர்களும், 11 மணிமுதல் 3 மணிவரை மதகுருமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஊடகவியலாளர்களும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்
சனிக்கிழமை (13), காலை 8 மணிமுதல் 03 மணிவரை சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும், 3 மணிமுதல் 6 மணிவரை அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஏனைய திணைக்களத்தினரும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY