காற்றாலைத் திட்டத்துக்கும் இல்மன்னற் மணல் அகழ்வக்கும் எதிரான போராட்டம்

மன்னார் தீவு மக்களுக்கு நிம்மதி பறிபோகிறது . காற்றாடிக் காம்பு கழுத்தை அறுக்கும் அபாயம் தோன்றியுள்ளது என்ற தொணிப்பொருளில் மீண்டும் தலைதூக்கும் இரண்டாம் காற்றாலைத் திட்டத்தால் மன்னார்த் தீவு பாலைவனமாகும் என எச்சரிக்கையாக அமைவதுடன்

ஏற்கனவே அமைக்கப்பட்ட காற்றாடிகள் எழுப்பும் சத்தத்தால் மக்கள் குடியெழுப்பி அவதி நிலவும்போது இன்னும் பல காற்றாடிகளை ஊரின் அருகாமையில் நிறுவ முயலும் அரசு இடைவெளியில்லாமல் சதா மக்களின் காதுக்கள் இரைச்சல் நிலைக்கப்போகிறது எனவும்

மன்னார்த் தீவின் குடியிருப்புநிலம் சுருங்கப்போகிறது பசுமை காடுகள் அழியப் போகின்ற. சிரேங்காரப் பறவையினம் எங்கோ தொலைவில் தொலையப் போகின்றது

கடல் வளம் துடைத்தெறியப்படப் போகிறது மண்ணகழ்வு தலைதூக்கி மன்னார் தீவின் நிலப்பரப்பு கபளீகரம் செய்யப்படுகின்றது

காடுகள் அழிக்கப்படுவதால் மண்ணரிப்பு நிகழ்ந்து கடல் நீர் கரை நோக்கி நகர்ந்து குடியிருப்பை அழிக்கப்போகிறது

ஆகவே மன்னார் தீவில் கரையோரமாக அமைக்கப்படும் காற்றாலைகளுக்கும் மற்றும் இல்மன்னற் மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசாலை மற்றும் அயல் கிராம மக்கள் யாவரும் ஒன்றிணைந்து புதன் கிழமை (24.08.2022) காலை 8 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை பேசாலையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தையும் அத்துடன் பேரணியும் நடாத்தினர்.

இந்த நாளில் பேசாலை பகுதியில் சகல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன் தனியார் போக்கவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு மாணவர்கள் பாடசாலைகளை பகிஷ்கரித்த நிலையில் மீனவர்களும் கடற்தொழிலுக்கு செல்லாது இயல்பு நிலை பாதிப்டைந்திருந்தது.

பல நூற்றுக்கணக்கான சிறுவர் தொடக்கம் பெரியோர் வரையிலான மக்கள் கலந்து கொண்ட இவ் போராட்டத்தில் மன்னார் பிரதேச சபை தவிசாளரிடம் மகஜர் கையளிக்கச் சென்றபோது தவிசாளர் இல்லாமையால் உப தவிசாளரிடம் சிறுவன் ஒருவரால் மகஜர் கையளிக்கப்பட்டது.

காற்றாலைத் திட்டத்துக்கும் இல்மன்னற் மணல் அகழ்வக்கும் எதிரான போராட்டம்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY