
posted 14th August 2022
ஆராச்சிகளின் முடிவுகள் பிரசுரிக்கப்படும்போது ஆராய்ச்சியாளர்களினதும் பல்கலைக்கழகத்தினதும் தரம் உயரும் எனத்தெரிவித்த தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், ஆராய்ச்சி என்பது கற்பித்தலில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும் என்றும் கூறினார்.
10 ஆவது சர்வதேச ஆய்வரங்கு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கேட்போர் கூடத்தில் பீடத்தின் தலைவர் பீடாதிபதி கலாநிதி சபீனா எம்.ஜி. ஹஸன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில், ஆராய்ச்சி அறிக்கையானது ஆய்வின் உடனடி நோக்கத்தை மட்டுமல்ல இறுதி நோக்கத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். நீங்கள் கல்வி ஆராய்ச்சி செய்யும்போது, உங்கள் நோக்கத்தை வரையறுப்பது முக்கியமாகும். ஒரு நோக்க அறிக்கை வரும்போது, உங்கள் தரமான அல்லது அளவு ஆராய்ச்சியின் நோக்கத்தை தெளிவாக வரவேற்கிறது. தனிப்பட்ட மற்றும் உலக எடுத்துக்காட்டுகள் மூலம் ஆராய்ச்சி நோக்க அறிக்கையில் விவரங்களை பெறவேண்டும்.
பொதுவாக ஆராய்ச்சி புதிய தேடல்களை உருவாக்க ஏற்கனவே இருக்கிற ஆராய்ச்சிகளுக்கு மேலதிகமாக அறிவு சார்ந்த தகவல்களை கொண்டு சேர்ப்பதுடன் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உள்ள வெற்றிடங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சி என்பது கற்பித்தலில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளோடு ஆராய்ச்சியும் ஒரு கல்வியியலாளர்களின் முக்கிய வகிபாகமாகும். அதாவது கற்பித்தல் துறையில் நிலைத்து நிற்பதற்கு ஆராய்ச்சியில் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும். கோட்பாடு சம்பந்தமான கல்வியுடன் சேர்த்து ஆராய்ச்சி செய்வது அவசியமாகும்.
முழு ஈடுபாட்டுடன் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் நோக்கத்தோடு ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். தொடர்ச்சியான இலக்கண ஆய்வுகளின் மூலம் ஆராய்ச்சிக்குரிய பிரச்சினையை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.
இலக்கணம் பற்றி ஆராய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சியாளர் அதிகமாக வாசிப்பில் ஈடுபட வேண்டும். அத்துடன் இலக்கணம் பற்றி ஆய்வு செய்வதன் மூலம் ஏற்கனவே செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிவதோடு அதில் விடப்பட்ட கண்டறியப்பட்டாத விடயங்களை அறிய வேண்டும்.
ஆராய்ச்சியாளர்கள் எப்போதும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஆராய்ச்சி செய்வதைவிடுத்து, வெவ்வேறான துறைகளிலும் ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
எனது துறை சமூக விஞ்ஞானமாக இருந்தபோதிலும் கொவிட் - 19 காலப்பகுதியில் இது சம்பந்தமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கொவிட் - 19 தாக்கம் எவ்வாறு சமூக, பொருளாதாரம், கல்வி, அரசியல் ரீதியிலான தாக்கத்தை உண்டு பண்ணியது என்பதனை கண்டறிய முடிந்தது. இவ்வாறாக ஆராய்ச்சிகளின் முடிவுகள் பிரசுரிக்கப்படும்போது ஆராய்ச்சியாளர்களின் தரமும் பல்கலைக்கழகத்தின் தரமும் உயரும் என்றும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY