
posted 20th August 2022
நேற்று யாழ்ப்பாணம் வந்த ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபையின் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட செயலரை சந்தித்துக் கலந்துரையாடினர்.
ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பாங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் - கார், இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் ஆகியோரே யாழ். மாவட்ட செயலர் க. மகேசனை சந்தித்தனர்.
காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட டேவிட் மஸ்னெக்யன் - கார், “தற்போதைய பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து யாழ். மாவட்ட செயலரிடம் கேட்டறிந்தோம்”, என்றார்.
கடந்த 16 ஆம் திகதி இலங்கை டேவிட் மஸ்னெக்யன் - கார் தொடர்ச்சியாக பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினரையும் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY