
posted 1st August 2022
இலங்கையில் எரிபொருள் விநியோகம் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் புதிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகன எரிபொருளுக்கான தேசிய அனுமதி அட்டை முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது. அதாவது கியூ. ஆர். குறியீட்டு முறைமை மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தகவலை மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளதுடன், அண்மைய தினம் வரை சுமார் 46 இலட்சம் வாகனங்கள் குறித்த கியூ. ஆர் முறைமைக்ககென பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பதிவு நடவடிக்கை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய எரிபொருள் பாஸ் (கியூ.ஆர்) முறைமை நாடு முழுவதும் ஆகஸ்ட் ஒன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதால், இதுவரை நடைமுறையிலிருந்த வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம், மற்றும் டோக்கன் முறை, என்பன செல்லுபடியற்றதாக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸி எண்ணுடன் இதற்கெனப் பதிவு செய்ய முடியாத வாகனங்களைப் பயன்படுத்துவோர் முதல் வருவாய் உரிம எண்னுடன் பதிவு செய்யலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சட்ட விரோதமாக எரிபொருளை சேமிப்போர் மற்றும் விற்பனை செய்வோர் தொடர்பாக வீடியோ அல்லது புகைப்பட ஆதாரரங்களிருப்பின் 0742123123 எனும் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொது மக்களைக் கோரியுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)