இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

மானிப்பாயில் 21 வயது இளைஞர் ஒருவர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரே வாள் வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில், மானிப்பாய் நகரப் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயதுடைய ஜெயக்குமார் சஜீந்திரன் என்ற இளைஞரே வாள்வெட்டுக்கு இலக்கானார்.

இந்த இளைஞர் தெல்லிப்பழை பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. கையில் படுகாயம் அடைந்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.

காயமடைந்த இளைஞர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY