இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் விசேட வகுப்பு தொடக்கம்

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நேற்று தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் திரு ,சி. பாலச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற இத் தொடக்க விழாவில்;

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் சங்ககரவெட்டி பிரிவின் தலைவர் சி. ரகுபரன், செயலாளர் த. பகிதரன், நிர்வாக அங்கத்தவர் வே. நாகேந்திரன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

தொடக்க விழாவின் வளவாளர்களாக திருமதி. சுசிலா கமலதாஸ், திருமதி.ச. யோகேந்திரன், திருமதி.ற. பாஸ்கரன், திருமதி.மோ. கிருஸ்ணானந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த விசேட வகுப்பில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் நெல்லியடி மெ.மி.த.க .பாடசாலையில் விசேட வகுப்பு தொடக்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)