
posted 7th August 2022
இலங்கையில் மக்களின் வாழ்க்கைச் செலவு உச்சம் தொட்ட நிலையிலுள்ள தற்சமயம், மக்களின் அன்றாட பாவனையிலுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் மொத்த சந்தை விநியோகஸ்த்தர்களும், இறக்குமதியாளர்களுமான புறக்கோட்டைவர்த்தக சங்கத்தினர் இந்த விலைக்குறைப்பு பற்றி அறிவித்துள்ளனர்.
குறிப்பாக பருப்பு, சீனி, வெங்காயம், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளே தற்சமயம் குறைவடைந்துள்ளன.
இதன்படி ஒருகிலோ 600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பருப்பு 400 ரூபாவாகவும், 330 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட சீனி, 270 ரூபாவாகவும், 1900 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட செத்தல் மிளகாய் 1300 ரூபாவாகவும், 215 ரூபாவிலிருந்து உருளைக்கிழங்கு 150 ரூபாவாகவும் வெங்காயம் 180 ரூபாவிலிருந்து 130 ரூபாவாகவும் விலைகுறைப்பு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த விலைகுறைப்பை உள்ளுர் வியாபாரிகள் பலர் உடனடியாக அமுல்படுத்த முன்வரவில்லையெனவும், பழைய விலைக்கு பெறப்பட்டகையிருப்புகள் முடிந்த பின்னரே புதிய குறைக்கப்பட்ட விலைக்கு ஏற்பகொள்வனவு செய்து, குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய முடியுமெனவும் தெரிவிப்பதாக பாவனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறைக்கப்பட்ட விலைகளை விடவும் மேலான விலையில் குறிப்பிட்ட அத்தியாவசியப்பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் மாவட்ட செயலகங்களிலுள்ள நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு முறையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY