வைரஸ் அனர்த்தத்திலும் விஷம்போல் ஏறும் விலைவாசி! கட்டுப்படுத்துவது கஷ்ரமானது - பொறுப்புள்ள அமைச்சர்
வைரஸ் அனர்த்தத்திலும் விஷம்போல் ஏறும் விலைவாசி! கட்டுப்படுத்துவது கஷ்ரமானது - பொறுப்புள்ள அமைச்சர்

கொவிட் - 19 வைரஸ் தாக்க அனர்த்தத்தினால் நாடு பெரும் சவால்களை எதிர்நோக்கிவரும் நிலையில், விஷம் போல் ஏறிவரும் விலைவாசி ஏற்றம் பொது மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

குறிப்பாக நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மூலம் முடக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளதுடன் குறிப்பிட்ட சில பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அன்றாடம் நுகர்வோருக்குத் தேவையான சீனி, பருப்பு மற்றும் பல பொருட்களின் விலைகள் அசுர வேகத்தில் உயர்ந்துள்ளதுடன், பால்மா வகைகளுக்குப் பெரும்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கான பால்மா தட்டுப்பாடு பெரும் பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களை லங்கா ச.தொ.ச மூலம் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் ஆவன செய்துவரும் நிலையிலும், வெளிச்சந்தைகளில் பொருட்களின் விலை
உயர் வைக்கப்பட்டுப்படுத்த முடியாத நிலமையே உள்ளது.

இதனால் நுகர்வோர்களான பொது மக்கள் பெரும் பாதிப்படைந்து வருவதுடன், ஏழை, எளிய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே அல்லற்படும் பரிதாப நிலமையும் உருவாகியுள்ளது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் அத்தியாவசியப்பொருட்கள் மட்டுமன்றி மரக்கறி வகைகளின் விலையும் உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு சபையினர், கூடுதல் விலைக்கு அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கும் வர்த்தகர்களையும் திடீர் சுற்றி வளைப்புக்கள் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

தவிரவும், “பொருட்களின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவது எளிதான காரியமல்ல, அந்த விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என அரசின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே சிவப்பு அறிவிப்பைக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரஸ் அனர்த்தத்திலும் விஷம்போல் ஏறும் விலைவாசி! கட்டுப்படுத்துவது கஷ்ரமானது - பொறுப்புள்ள அமைச்சர்

ஏ.எல்.எம்.சலீம்