
posted 22nd August 2021

கிளிநொச்சி ஏ - 09 நெடுஞ்சாலையில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தென்னிலங்கையிலிருந்து யாழ்.நோக்கி பயணித்த டொல்பின் ரக வான் ஒன்றும் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே விபத்து நிகழ்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் வானின் சாரதியின் தூக்கக் கலக்கமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
வான் சாரதி கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகாயம் அடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்