வயோதிபரின் சடலம் மீட்பு
வயோதிபரின் சடலம் மீட்பு

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (17.08.2021) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் கரவெட்டி மேற்கு, இராஜகிராமத்தைச் சேர்ந்த பைரவன் நாகரத்தினம் (வயது- 78) என்பவராவார்.

சுப்பர்மடம் பகுதியில் உள்ள மீனவ வாடிக்கு அருகாமையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வயோதிபரின் சடலம் மீட்பு

எஸ் தில்லைநாதன்