வடமாகாணத்தில் கொரொனாவினால் இன்று உயிரிழந்தவர்கள் - சுகாதாரத் தரப்பின் அறிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் இன்று திங்கட்கிழமை(30.08.2021) மாலை உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.08.2021) வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாமுனை, செம்பியன்பற்றைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இருவர் இன்று கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, கொடிகாமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார் என்று சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தில் கொரொனாவினால் இன்று உயிரிழந்தவர்கள் - சுகாதாரத் தரப்பின் அறிவிப்பு

எஸ் தில்லைநாதன்