
posted 18th August 2021

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரனுக்கு கொரொனாதொற்று நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் நடத்திய கலந்துரையாடலில்மாகாண சுகாதாரப்பணிப்பாளரும் கலந்துகொண்டார். கலந்து உரையாடலின் பின்னர் மாகாண பிரதம செயலாளருக்கு கொரொனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வடமாகாண சுகாதார பணிப்பாளர் தனிமைப்படுத்தப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்ட
காலப் பகுதியில் அவருக்கு பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்ட வேளை கொரொனா தொற்று இருப்பதாக உறுதிப் படுத்தபபட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்