
posted 31st August 2021

இந்திய மீனவர்களின் டோலர் படகுகளின் அத்துமீறினால் வெட்டி நாசமாக்கப்பட்ட வலைகளை எரித்து வடமராட்சி பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் உள்ளுர் மீனவர்களின் வலைகள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு வருகின்றன. இதுதொடர்பில் உரிய அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சர் ஆகியோருக்கும் மீனவர்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளுர் மீனவர்களின் வலைகள் தொடர்ச்சியாக அறுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பார்வையிடுவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை(31.08.2018) யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் ஆகியோர் கொட்டடி மற்றும் முனைப் பகுதிகளுக்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தொடர்ச்சியாக மீனவர்களின் வலைகள் வெட்டப்பட்டு வருவதாகவும் இதனால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி இந்திய ரோலர் படகுகளால்
வெட்டப்பட்ட வலைகளை தீமூட்டி எரித்து மீனவர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதேவேளை நேற்று திங்கட்கிழமை (30.08.2018) இரவு மட்டும் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டு மீவவர்களின் வலைகள் இந்திய டோலர் படகுகளினால் நாசமாக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன்