
posted 30th August 2021
கொரோனா தொற்றால் நேற்று (30.08.2021) மட்டும் யாழ்ப்பாணத்தில் 6 பேரும், கிளிநொச்சியில் இருவருமாக 8 பேர் உயிரிழந்தனர்.
யாழ். போதனா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண், யாழ். மாநகர பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண், மாவிட்டபுரத்தை சேர்ந்த 63 வயது ஆண், கொடிகாமத்தை சேர்ந்த ஆண், மற்றும் பருத்தித்துறை ஆதார மருத்து வமனையில் சிகிச்சை பெற்ற செம்பியன்பற்றைச் சேர்ந்த 63 வயது ஆண், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஆகியோரே உயிரிழந்தனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோன்று, கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 72 வயதுடைய இரு ஆண்களும் நேற்று தொற்றால் உயிரிழந்தனர்.

எஸ் தில்லைநாதன்