
posted 29th August 2021

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உட்பட மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் யாழ்ப்பாணம் அரசடி வீதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஆண் ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 33 வயதுடைய இஸ்லாமிய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
அச்சுவேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று வீட்டில் உயிரிழந்தார் என்று கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது.
இதேவேளை, மந்திகை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 34 வயது பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 231ஆக உயர்வடைந்துள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த நால்வர் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா பரிசோதனைக் கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குறித்த நால்வருக்கும் கொரோனாத் தொற்று இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், திருச்செல்வம் செல்லம்மா (வயது 82) என்பவர் உயிரிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு அவருடைய மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், செல்லம்மா (வயது 75), S.ராமர் (வயது 67), மீனாம்பாள் (வயது 87) ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சடலங்கள் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

எஸ் தில்லைநாதன்