யாழில் மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த மேலும் ஐவர் உயிரிழந்தனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த மரணங்கள் நேற்று முற்பகல் 10 மணி முதல் இன்று காலை வரை இடம்பெற்றுள்ளன.

நேற்று வடக்கில் எட்டு பேரின் விவரங்கள் வெளியாகியிருந்த நிலையில் அவற்றில் உள்ளடக்கப்பட்டவர்களை விட மேலதிகமான ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை உயிரிழந்த சாவகச்சேரி வர்த்தகர் உட்பட்ட ஐவரே உயிரிழந்துள்ளனர்.

யாழில் மேலும் ஐவர் கொரோனாவுக்கு பலி!

எஸ் தில்லைநாதன்