யாழில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 31 பேர் பலி! மொத்த உயிரிழப்பு 229 ஆக அதிகரிப்பு!
யாழில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 31 பேர் பலி! மொத்த உயிரிழப்பு 229 ஆக அதிகரிப்பு!

யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொவிட்-19 புள்ளிவிவர அறிக்கையின் அடிப்படையில் இவ்விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஓகஸ்ட்-22 முதல் 28 வரையிலான 07 நாட்களில் இவ்வாறு 31 கொவிட்-19 மரணங்கள் யாழ். மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளன.

ஓகஸ்ட் மாதத்தில் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்கள் தொடர்பான விவரம் வருமாறு:-

ஓகஸ்ட் - 02 - 04 பேர்
ஓகஸ்ட் - 03 - 02 பேர்
ஓகஸ்ட் - 04 - 02 பேர்
ஓகஸ்ட் - 06 - 02 பேர்
ஓகஸ்ட் - 07 - 03 பேர்
ஓகஸ்ட் - 08 - 03 பேர்
ஓகஸ்ட் - 09 - 03 பேர்
ஓகஸ்ட் - 10 - 06 பேர்
ஓகஸ்ட் - 11 - 05 பேர்
ஓகஸ்ட் - 12 - 04 பேர்
ஓகஸ்ட் - 13 - 05 பேர்
ஓகஸ்ட் - 14 - 07 பேர்
ஓகஸ்ட் - 15 - 03 பேர்
ஓகஸ்ட் - 16 - ஒருவர்
ஓகஸ்ட் - 17 - 02 பேர்
ஓகஸ்ட் - 18 - 06 பேர்
ஓகஸ்ட் - 19 - ஒருவர்
ஓகஸ்ட் - 20 - 05 பேர்
ஓகஸ்ட் - 21 - 03 பேர்
ஓகஸ்ட் - 22 - 02 பேர்
ஓகஸ்ட் - 23 - ஒருவர்
ஓகஸ்ட் - 24 - 06 பேர்
ஓகஸ்ட் - 25 - 06 பேர்
ஓகஸ்ட் - 26 - 07 பேர்
ஓகஸ்ட் - 27 - 04 பேர்
ஓகஸ்ட் - 28 - 05 பேர்

இதன் மூலம் இந்த மாதத்தின் முதல் 28 நாட்களிலும் 98 கொவிட்-19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதையடுத்து யாழ். மாவட்டத்தில் ஓகஸ்ட்-28 வரையில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளவர்களது எண்ணிக்கை 229 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விவரம் வருமாறு:

மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக;

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 50 பேர்
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 30 பேர்
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 26 பேர்
நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 28 பேர்
பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 19 பேர்
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 18 பேர்
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 17 பேர்
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 15 பேர்
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்
கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 06 பேர்
வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 05 பேர்
காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்

யாழில் கொரோனாவுக்கு ஒரே வாரத்தில் 31 பேர் பலி! மொத்த உயிரிழப்பு 229 ஆக அதிகரிப்பு!

எஸ் தில்லைநாதன்