யாழில் கொரோனாவால் 39 வயதுப் பெண் உட்பட இருவர் மரணம். இறப்பு 220ஆல் உயர்வு!

யாழ்ப்பாணத்தில் நேற்று வியாழக்கிழமை மேலும் இருவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 220ஆக உயர்வடைந்துள்ளது.

யாழில் கொரோனாவால் 39 வயதுப் பெண் உட்பட இருவர் மரணம். இறப்பு 220ஆல் உயர்வு!

எஸ் தில்லைநாதன்