
posted 30th August 2021
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 267 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவற்றின் விபரம் வருமாறு;
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர்,
வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 03 பேர்
யாழ்.மாவட்டத்தில் 11 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02பேர்,
யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,
நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,
வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,
காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்