மருதமடு பெருவிழா திருப்பலி
மருதமடு பெருவிழா திருப்பலி

மிக குறைந்த ஆயர்கள் அருட்பணியாளர்களுடன் மருதமடு பெருவிழா திருப்பலி

மன்னார் மறைமாவட்டத்தில் ஆவணி மாதம் 15 ந் திகதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கும் மருதமடு அன்னையின் பெருவிழாவானது சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையின் தலைமையில் இத் திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாத் திருப்பலியானது அன்று காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் ஆண்டகை மற்றும் அருட்பணியாளர்கள் இணைந்து இவ் விழா கூட்டுத்திருப்பலியை ஒப்புக்கொடுப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இவ் விழாவில் ஏனைய மறை மாவட்டங்களின் ஆயர்கள் மற்றும் அருட்பணியாளர்களின் வருகைகளும் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருதமடு பெருவிழா திருப்பலி

வாஸ் கூஞ்ஞ