
posted 16th August 2021

கடந்த 6 ந் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இப் பெருவிழா கடந்த ஒன்பது நாட்கள் நவநாட்கள் இடம்பெற்றதுடன் சனிக்கிழமை(14.08.2021) நற்கருணை விழாவும் இதையடுத்து நற்கருணை பவனியும் இடம் பெற்றதைத் தொடர்ந்து சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை நற்கருணை ஆசீரும் அன்று வழங்கினார்.
ஞாயிற்றுக்கிழமை (15.08.2021) காலை 6.15 மணிக்கு நடைபெற்ற மருதமடு அன்னையின் பெருவிழா திருப்பலியானது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் ஆண்டகை மேதகு வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை உட்பட அருட்பணியாளர்கள் இணைந்து கூட்டுத் திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர் .
இதைத் தொடர்ந்து வழமைபோன்று திருச்சுரூப பவனியும் அன்னையின் திருச்சுரூப ஆசீரும் சிலாபம் ஆயரால் வழங்கப்பட்டது.
இத் திருவிழா காலங்களில் மன்னார் ஆயரால் இத் திருத்தலத்திருந்து மறைமாவட்ட மக்களுக்கு வருடத்தில் இருமுறை வழங்கப்படும் அப்போஸ்தலிக்க மரிஅன்னைஆகியோரின் பரிபூரணபலன் கொண்ட ஆசீரும் அங்கு கூடியிருந்த இறை மக்களுக்கும் மற்றும் கொரோனா காரணமாக ஆலயம் வரமுடியாது வீடுகளிலிருந்து இவ் திருவிழாவை தொலைக்காட்சிகளின் மூலம் இணைந்து இருந்த யாவருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை திருச்பையின் தாய் மொழியாம் லத்தீன் மொழியில் வழங்கியதும் குறிப்பிடதக்கது.

வாஸ்கூஞ்ஞ