
posted 25th August 2021

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம். கோரிக்கை நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இவர்களின் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையானது எழுத்து மூலம் வழங்குவதுடன் கோரிக்கை நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என வலியுறுத்தியுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார தொண்டர்களுக்குரிய மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்கக் கோரிய இந்த கவனயீர்ப்பு போரட்டம் இன்று புதன்கிழமை (25) காலை 10 மணியளவில் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக தங்கள் கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின்போது சுகாதார தொண்டர்களின் மேலதிக நேர கொடுப்பனவு சம்பந்தமாக கடந்த காலங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் இதுவரைக்கும் இதற்கான சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் இன்றைய தினம் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கின்றோம் என தெரிவித்தனர்.
அத்துடன் இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான மேலதிக கொடுப்பனவை சுகாதார தொண்டர்களுக்கான எட்டாம் மாத வேதனத்துடன் முழுமையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தாங்கள் முன்வைத்து இப் போராட்டத்தை நடாத்தவதாகவும் தெரிவித்தனர்.
சுகாதார தொண்டர்களாகிய எங்கள் கோரிக்கையானது எழுத்து மூலம் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இந்த கவனயீர்ப்பு போராட்டமானது தொடர்ச்சியாக நடைபெற உள்ளதாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய சுகாதார தொண்டர்களால் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ