மன்னாரில் முருங்கன் மகா வித்தியாயலத்திற்கு 3 பரிசில்கள்
மன்னாரில் முருங்கன் மகா வித்தியாயலத்திற்கு 3 பரிசில்கள்

இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் மன்னாரில் முருங்கன் மகா வித்தியாலம் 3 பரிசில்களையும் தனதாக்கிக் கொண்டது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஆசாதிக்கா அம்ரித் மஹோத்ஸவ' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி, கலாச்சார அலுவல்கள், மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து நடாத்திய கட்டுரைப் போட்டியில் மன்னார் மாவட்டத்தில் ஒரே பாடசாலை மன்.முருங்கள் மகா வித்தியாலயம் மூன்று பரிசில்களையும் தனதாக்கிக் கொண்டது.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'ஆசாதிக்கா அம்ரித் மஹோத்ஸவ' என்னும் சிறப்பு நிகழ்வுகள் வரிசையில் பாரதத்தின் 75 வது சுதந்திர தின விழா யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஞாயிறு அன்று (15.08.2021) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் யாழ் பகுதிக்கான பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு ஆகியோர் பலாலியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து யாழ் இந்திய துணை தூதரகத்தில் துணைத்தூதுவர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஆசாதிக்கா அம்ரித் மஹோத்ஸவ' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக யாழ் இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி, கலாச்சார அலுவல்கள், மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்துடன் இணைந்து வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கிடையே நடாத்திய கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட வெற்றியாளர்களும் அறிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில்

1ம் இடம் அனோஜிக்கா சிவகுமார் (யாழ் இந்து மகளிர் கல்லூரி தரம் 13), 2ம் இடம் கம்சி;கா கஜேந்திரன் (யாழ.; வயாவிளான் மத்திய கல்லூரி தரம் 13). 3ம் இடம் சுவஸ்திகா சர்வேஸ்வரன் (யாழ். யூனியன் கல்லூரி, தரம் 12)

கிளிநொச்சி மாவட்டத்தில்

1ம் இடம் குமார் கிருஷாந்தி (கிளி.இராமநாதபுரம் மகா வித்தியாலயம் தரம ;12). 2ம் இடம் சுப்பிரமணியம் பபிதா (கிளி.கிளிநொச்சி இந்துக் கல்லூரி தரம் 13), 3ம் இடம் சுதாகரன் சுவேதிகா (கிளி.இராமநாதபுரம் மகா வித்தியாலயம் தரம் 12),

முல்லைத்தீவு மாவட்டத்தில்

1ம் இடம் சுப்பிரமணியம் சுடர்ச்செல்வி (மு.புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி. தரம் 13). 2ம் இடம் மயில்வாசன் தினேகா (மு.யோகபுரம் மகா வித்தியாலயம். தரம் 13). 3ம் இடம் சசிகுமார் ஷர்மிகா (மு.உடையார்கட்டு மகா வித்தியாலயம். தரம்13),

மன்னார் மாவட்டத்தில்
1ம் இடம் றசிக்குமார் சசிகலா (மன்.முருங்கன் மகா வித்தியாலயம். தரம் 11), 2ம் இடம் டியோன்மேரி யுஜிதா (மன்.முருங்கன் மகா வித்தியாலயம் தரம் 11). 3ம் இடம் சுதாகரன் சுதர்ஷிகா (மன்.முருங்கன் மகா வித்தியாலயம் தரம் 11).

வவுனியா மாவட்டத்தில்

1ம் இடம் மோகனப்பிரதா கோணேஷ்வரன் (வவு.சைவப்பிரகாச மகளிர் கல்லூரி தரம் 12). 2ம் இடம் குமுதினி பாலையா (வவு.பூந்தோட்டம் மகா வித்தியாலயம் தரம் 13). 3ம் இடம் ஞா.ரஜீந்தினி (வவு.புதுக்குளம் மகா வித்தியாலயம். தரம் 12) ஆகியோர் ஆவர்.

இவ் வெற்றியாளர்களுக்கு மொத்தமாக 75,000 ரூபா பணப்பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பணப்பரிசில்களை இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் வேறோரு சந்தர்ப்பத்தில் நடைபெறும் விழாவில் நேரடியாக வழங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் முருங்கன் மகா வித்தியாயலத்திற்கு 3 பரிசில்கள்

வாஸ் கூஞ்ஞ