
posted 19th August 2021

மன்னாரில் இம் மாதம் (ஆவணி) 300 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னாரில் புதன் கிழமை (18.08.2021) கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டிருந்தவர்களில் 05 நபர்களுக்கும், சமூகத்திலிருந்து 02 பேருக்கும், கடற்படை மற்றும் பொலிஸ் பகுதியிலிருந்து 04 பேருக்குமே இக் கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிக்கை தெரிவிக்கின்றது.
இவ் அறிக்கையின்படி இதுவரைக்கும் மன்னார் பகுதியில் மொத்தமக 1341 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 2021 இல் 1324 பேர் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டனர். இந்த மாதம் (ஆவணி) இது வரைக்கும் 300 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந் நடப்பாண்டில் (2021) சமூகத்திலிருந்து 977 பேரும், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 347 நபர்களும் இத் தொற்றுநோய் நபர்களாக கண்டு பிடிக்கப்பட்டவர்களாவர்.
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 13 நபர்கள் இத் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன் கிழமை (18.08.2021) 53 நபர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் (ஆவணி) இதுவரை 1573 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும், இது வரைக்கும் மன்னாரில் 27409 பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இதன் அறிக்கை தெரிவிக்கின்றது. பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இன்னும் 53 நபர்களின் அறிக்கைகள் மட்டுமே எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ