
posted 13th August 2021

மன்னாரில் ஆவணி மாதம் இதுவரைக்கும் 215 கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட பி சீ ஆர் பரிசோதனையில் வியாழக் கிழமை அதாவது 12.08.2021 அன்று கிடைக்கப் பெற்ற முடிவில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இந்த மாதம் 08ம் திகதி மட்டும் 215 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த . வினோதன் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கொரோனா தொடர்பாக அவர் தெரிவிக்கையில் வியாழக்கிழமை (12.08.2021) கிடைக்கப் பெற்ற கொரோனா தொற்றாளர்களில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 12 நபர்களும், பேசாலையில் 02 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இற்றைவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 1256 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந் நடப்பு ஆண்டில் (2021) 1239 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் (2021) சமூகத்தில் எடுக்கப்பட்ட பி சீ ஆர் பரிசோதனையில் 923 நபர்களும், மன்னார் பொது வைத்தியசாலையில் 316 பேரும் கொரோனா தொற்றாளர்களாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதம் 08ம் திகதி 1375 பி சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 27211 பி சீ ஆர் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது 242 பி சீ ஆர் பரிசோதனைகளுக்கான முடிவுகள் வரவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில் இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக இறந்தவர்களின் தொகை 10 ஆக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வாஸ் கூஞ்ஞ