
posted 20th August 2021

பருத்தித்துறை பிரதேச சபையின் மந்திகை பொதுச்சந்தை இருவாரகால கொரோனா தொற்று முடக்கத்தின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இச்சந்தை வியாபாரிகள் மத்தியில் பி சி ஆர் பரிசோதனைமேற்கொண்ட போது இருவருக்கு கொரொனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஏனைய வியாபாரிகள் அனைவரும் இரு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் இரு வாரகாலம் நிறைவுற்றதும் அவர்கள் மீண்டும் பி சி ஆர் பரிசோதனைக்குட்பபடுத்தப்பட்டபோது வெற்றிலை வியாபாரிஒருவருக்கு கொரொனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெற்றிலை வியாபாரி தவிர ஏனைய வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிககப்பட்டு பொதுச்சந்தை திறக்கப்பட்டது.
இச்சந்தையில்தற்போது சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப வியாபாரம் நடைபெறுகிறது.

எஸ் தில்லைநாதன்