
posted 25th August 2021

மக்கள் மீது கொண்ட இரக்கத்தையும், இறை பக்தியையும் தனது கவசமாக பயண்படுத்தும் சேவையாளருக்கு குவியும் பிறந்தநாள் வாழத்துக்கள்.
மன்னார் மாவட்டத்தின் தற்பொழுது அரசாங்க அதிபராக முதல் பெண்மணியான திருமதி.அன்னம்மா ஸ்ரான்லி டீமெல் இன்று புதன் கிழமை (25.08.2021) புதிய அகவையில் தடம் பதிப்பதையிட்டு மன்னார் மற்றும் பல இ;டங்களிலிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் காணப்படுகின்றது.
இவர் மன்னார் மாவட்டத்தின் வங்காலை கிராமத்தைச் சார்ந்தவர் ஆவார்.
இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பட்டத்தை பெற்றவராக தனது முதல் அரச பணியாக ஆசிரியப்பணியில் தடம் பதித்து மன்னாரில் நானாட்டான் மத்திய வித்தியாலயம் மற்றும் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் கடமையாற்றினார்.
இந்த காலப்பகுதியில் இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்தவராக மன்னார் கமநல சேவைகள் திணைக்கள பணிப்பாளராகவும். மன்னார் நகர் பிரதேச செயலாளராகவும், மன்னார் மேலதிக அரசாங்க அதிபராகவும். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளராகவும், வட மாகாண பிரதம பிரதி செயலாளராகவும் கடமையாற்றியதைத் தொடர்ந்து தற்பொழுது மன்னார் மாவட்டத்துக்கு முதல் பெண் மணி அரச அதிபர் என்ற மகுடத்துடன் திகழ்ந்து வருகின்றார்.
யுத்த சூழ்நிலையில் மன்னார் நகர் பிரதேச செயலாளராக கடமைபுரிந்து வந்த சமயத்தில் தனது பகுதியில் மக்களுக்கு எதாவது இன்னல்கள் ஏற்பட்டபொழுதெல்லாம் மக்கள் மீது கொண்ட இரக்கத்தையும், இறை பக்தியையும் தனது கவசமாக பயண்படுத்தி போராளிகளாக இருக்கலாம் அல்லது பாதுகாப்பு படைகளாக இருக்கலாம் அவர்களை ஊடுறுவிச் சென்று பணி செய்த இரும்பு பெண்மணியாக இருந்து செயல்பட்டவர் என போற்றப்பட்டவர்.
அன்று யுத்த சூழ்நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற துடித்த இன்றைய பிறந்தநாள் கதநாயகி மன்னார் அரச அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் இன்று கொடிய நோயாக விளங்கும் கொவிட் தொற்று நோயிலிருந்து மன்னார் மக்களை காப்பாற்றுவதில் இரவு பகலாக சுகாதார சேவைகள் திணைக்களம். மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் பாதகாப்பு படையினருடன் இணைந்து தீவிரமாக செயல்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவ்வாறான நபருக்குத்தான் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருவதையும் நோக்கக்கூடியதாக இருக்கின்றது.
இவரின் சேவை தொடர்ந்து மேலோங்க புதிய அகவையில் தடம் பதிக்கும் அம்மணியை இறைவன் தொடர்ந்து வழி நடத்தவும் என்றும் மகிழ்வுடன் திழைக்கவும் உடல் உள நலத்துடன் இவர் தொடர்ந்து நிலைகொள்ள பலரின் வாழ்த்துக்கள் உரித்தாகுன்றது.

வாஸ் கூஞ்ஞ