பல தடைகளை முறியடித்து  ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுக் கொடுத்த வீரருக்கு பிரதமர் பாராட்டு
பல தடைகளை முறியடித்து  ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுக் கொடுத்த வீரருக்கு பிரதமர் பாராட்டு

தினேஷ் பிரியந்த

தொற்று நிலைமை காரணமாக எதிர்கொள்ள நேரிட்ட பல தடைகளை முறியடித்து நாட்டிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுக் கொடுத்த ஒரேயொரு மற்றும் முதலாவது வீரர் தினேஷ் பிரியந்த ஆவார் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு தெரிவித்திருக்கும் வாழ்த்தில்

டோக்கியோ பராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் வீரருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

பிரிவினைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை ஒன்றிணைக்கும் செயற்பாட்டில் தனது பொறுப்பை நிறைவேற்றிய இராணுவ வீரர் தினேஷ் பிரியந்த 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் எமது தாய்நாட்டிற்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

அதற்கமைய எமது நாட்டிற்கு இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுக் கொடுத்த ஒரேயொரு மற்றும் முதலாவது வீரர் தினேஷ் பிரியந்த ஆவார்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்கொள்ள நேரிட்ட பல தடைகளை முறியடித்து நீங்கள் நாட்டிற்கு பெற்றுக்கொடுத்த இந்த வெற்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

ஏனைய வீர, வீராங்கனைகளும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி எமது தேசிய கொடியை உயர பறக்கச் செய்வதற்கு இந்த வெற்றி உதவும் என நம்புகின்றேன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

பல தடைகளை முறியடித்து  ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுக் கொடுத்த வீரருக்கு பிரதமர் பாராட்டு

வாஸ் கூஞ்ஞ