
posted 21st August 2021

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் காரணமாக பல்வேறு பிரதேசங்களும் நகரங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
இம்முறை அமுல்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டத்திற்கு கிழக்கிலங்கையின் பல பிரதேசங்களிலும் பொது மக்கள் ஆதரவாக செயற்பட்டுவருவதுடன் பாதுகாப்புத் தரப்பினரின் குறிப்பாக இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும் பல பிரதேசங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு முதல் இந்த தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் அறிவித்தல் வெளியானதும் மக்கள் முந்தியடித்துக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேமிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.
எதிர்வரும் 30 ஆம் திகதி அதிகாலை நான்கு மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரங்குச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சில கிராமப் புரங்களில் பொது மக்கள் தனிமைப்படுத்தல் ஊரங்குச்சட்டத்தை அசட்டை செய்து நடமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது.
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகள் வெறிச்சோடி காணப்படுவதையும் இங்கு காணலாம்.

ஏ.எல்.எம்.சலீம்