
posted 11th August 2021
வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராஜா 76வது வயதில் கொரொனா தொள்று நோயினால் பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலையில் இன்று புதன் கிழமை (11/08/2021) காலை 9 மணியளவில் காலமானார்.
இவர் ரெலோ இயக்கத்தின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராகவும், தலைவராகவும் தெரிவு செய்யப் பட்டிருந்தார். இதற்குமுன்னரும் 2011ஆம் காலப் பகுதியிலிருந்து சில ஆண்டுகள் நகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். ரெலோ இயக்கத்திலிருந்து சிவாஜிலிங்கம் அணியினர் வெளியேறியதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் விலகினார். இதனையடுத்தே கருணானந்தராஜா நகரசபைத் தலைவர் பதவியிலிருந்து கடந்த மாதத்துடன் ராஜினாமா செய்துள்ளார்.

எஸ். தில்லைநாதன்